வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: 227 ரன்கள் வித்தியசத்தில் இந்தியா அபார வெற்றி..!

டாக்கா; வங்கதேசத்துக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. டாக்காவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி கே.எல்.ராகுல் தலைமையில் களமிறங்குகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது. ஒருநாள் போட்டிகளில் 6வது முறையாக இந்திய அணி 400 ரன்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.  ஒருநாள் போட்டியில் அதிகமுறை 400 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்கா அணியின் சாதனையை இந்தியா சமன் செய்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 210 ரன்களும், விராட் கோலி 113 ரன்களும் குவித்தனர். இதன் மூலம் விராட் கோலி  தனது 44வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 34 ஓவர்களில் 182 ரங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. இந்திய அணியின் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகள், அக்ஷர படேல், உம்ரன் மாலிக் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 43, லிடன் தாஸ் 29, யாசிர் அலி 25 ரன்கள் எடுத்தனர். ஏற்கனவே 2 போட்டிகளில் வென்றிருந்ததால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 -1 என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றியது. …

Related posts

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கார்லோஸ்

யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்து முன்னேற்றம்

ஜிம்பாவேயுடன் 2வது டி20: 100 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: அபிஷேக் அதிரடி சதம்