வங்கதேசத்தில் நிலவும் பதற்றம்: முதற்கட்டமாக 49 தமிழக மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்

சென்னை: வங்கதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு செலவில் விமான பயணச்சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டு 49 மாணவர்கள் கொல்கத்தா, குவஹாத்தி, அகர்தலா ஆகிய விமான நிலையங்களில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:
வங்கதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழர்கள் சிலர் தாயகம் திரும்ப இயலாத சூழலில், தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விவரங்கள் பெறப்பட்டது.

மேலும், WhatsApp குழுக்கள் அமைத்து, அங்குள்ள தமிழ் மாணவர்களிடம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்களது கோரிக்கைகள் பெறப்பட்டது. அவர்களது நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மாணவர்களின் கோரிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையின் காரணமாக, முதற்கட்டமாக இன்று (21.07.24), தமிழ்நாடு அரசு செலவில் விமான பயணச்சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டு 49 மாணவர்கள் கொல்கத்தா, குவஹாத்தி, அகர்தலா ஆகிய விமான நிலையங்களில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

சென்னை விமான நிலையம் வந்தடையும் மாணவர்களை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் பா. கிருஷ்ணமூர்த்தி I.O.F.S வரவேற்று அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அடுத்த கட்டமாக மாணவர்களை வங்கதேசத்திலிருந்து தமிழ்நாடு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நேர்வில் மாணவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக முதலமைச்சரின் தலைமையிலான தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

Related posts

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

செங்கல்பட்டு அருகே ரசாயனம் கலந்த 200 விநாயகர் சிலைகள் பறிமுதல்