வங்கதேசத்திற்கு எதிரான 2வது டி.20 போட்டி 35 ரன் வித்தியாசத்தில் வெ.இண்டீஸ் வெற்றி

ரோசோ : வங்கதேச கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  இதில் முதலில் நடந்த 2 டெஸ்ட்டிலும் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி பெற்றது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டி நேற்று ரோசோ நகரில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட்இ்ண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவரில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன் குவித்தது. ரோவ்மேன் பவல் நாட்அவுட்டாக 28 பந்தில் 2 பவுண்டரி,6 சிக்சருடன் 61 ரன் அடித்தார். பிராண்டன் கிங் 57, கேப்டன் நிக்கோலஸ் பூரன் 34 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய வங்கதேச அணியில் ஷாகிப் அல்ஹசன் நாட்அவுட்டாக 68 (52 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), ஹொசைன் 34 ரன் எடுக்க மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் அவுட்ஆகினர். 20 ஓவரில் வங்கதேச அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 35 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி பெற்றது. ரோவ்மேன் பவல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.  3வது மற்றும் கடைசி போட்டி வரும் 7ம் தேதி நடக்கிறது. …

Related posts

டி20 உலக கோப்பையுடன் நாடு திரும்பியது இந்திய அணி: மும்பையில் பிரமாண்ட வெற்றி விழா; மனித கடலில் மிதந்து சென்ற வீரர்கள்

சாம்பியன் டிராபி தொடர் இந்தியா-பாகிஸ்தான் மார்ச் 1ல் மோதல்: உத்தேச அட்டவணை வெளியானது

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் சின்னர், ஜாஸ்மின் 2வது சுற்றில் வெற்றி