லேவர் கோப்பை டென்னிஸ் உலக அணி சாம்பியன்

லண்டன்: லேவர் கோப்பை டென்னிஸ் தொடரில் உலக அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. லண்டன் O2 அரங்கில் நடந்த இந்த தொடரில் (செப். 23-25) ஐரோப்பிய அணியுடன் மோதிய உலக அணி 13-8 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. ஐரோப்பிய அணியில் இடம் பெற்ற நட்சத்திர வீரர்கள் ரோஜர் பெடரர், ரபேல் நடால் இருவரும் இணைந்து விளையாடிய முதலாவது இரட்டையர் ஆட்டத்தில் தோற்றதுடன் விலகிக் கொண்டனர். ஐரோப்பிய அணிக்காக களமிறங்கிய மற்றொரு அனுபவ வீரரான நோவாக் ஜோகோவிச்சும் தனது ஒற்றையர் ஆட்டத்தில் உலக அணியின் பெலிக்ஸ் ஆகர் அலியஸிமியிடம் 3-6, 6-7 (3-7) என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவினார். ஸ்டெபனோஸ் சிட்சிபாசுடன் மோதிய உலக அணி வீரர் பிரான்சிஸ் டியபோ 1-6, 7-6 (13-11), 10-8 என்ற செட் கணக்கில் போராடி வென்றதை அடுத்து, உலக அணி 13-8 என்ற புள்ளிக் கணக்கில் அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. இதையடுத்து, ஐரோப்பிய அணியின் கேஸ்பர் ரூட், உலக அணியின் டெய்லர் பிரிட்ஸ் இடையே நடக்க இருந்த கடைசி ஒற்றையர் ஆட்டம் கைவிடப்பட்டது. உலக அணி லேவர் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது….

Related posts

வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

சாம்சன், ஈஸ்வரன் சதம்

149 ரன்னில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வலுவான முன்னிலை: பும்ரா அபார பந்துவீச்சு