லெட்சுமிபுரம் உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடைவிழா

தூத்துக்குடி, ஆக.27: காயல்பட்டினம், லெட்சுமிபுரம் உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடைவிழா கடந்த 22ம் தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் கொடைவிழாவில் இன்று (27ம் தேதி) காலை 9 மணிக்கு கணபதிஹோமம், வருஷாபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பூஜையை தொடர்ந்து பகல் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும் இரவு 9 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (28ம் தேதி) மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கடற்கரைக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருதல் நடைபெறுகிறது.

இரவு 9 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி இடம் பெறுகிறது. நாளை மறுதினம் (29ம் தேதி) லெட்சுமிபுரம் லெட்சுமி விநாயகர் கோயிலில் இருந்து 108 பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மதியகொடை, அம்மன் மஞ்சள் நீராடுதல் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு வில்லிசை, இரவு 10 மணிக்கு மாவிளக்கு பெட்டி நேமிஷம் செலுத்துதல் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அலங்கார பூஜை, முளைப்பாரி எடுத்து அம்மனுக்கு நேர்ச்சை செலுத்துதல், இரவு 1 மணிக்கு வாணவேடிக்கை இடம் பெறுகிறது. 30ம் தேதி காலை 8மணிக்கு பொங்கலிட்டு உணவு எடுத்தல் நடக்கிறது.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்