லிப்ட் கொடுத்தவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய மர்ம நபருக்கு போலீசார் வலை

காஜியாபாத்: இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்தவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தலைமறைவான நபரை போலிசார் தேடி வருகின்றனர். காஜியாபாத்தில் சானிட்டரி பொருட்கள் கடை நடத்தி வரும் சஜீத்(23), தனது இருசக்கர வாகனத்தில் கடந்த திங்களன்று இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த நபர் ஒருவர், லிப்ட் கேட்டார். இதற்கு ஒப்புக்கொண்ட சஜீத், அந்த நபர் கூறிய இடத்தில் இறக்கிவிடுவதாக கூறி தனது பைக்கில் அமரவைத்து அழைத்துச்சென்றார். ஆனால், அந்த நபரை ஆளில்லாத இடத்தை கடக்கையில் அங்கு வாகனத்தை நிறுத்துமாறு கூறி அங்கே இறங்கிக்கொள்வதாக கூறி அதன்படி இறஙகினார். அப்போது ”நன்றி” எனக்கூறிவிட்டு திடீரென சஜீத் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதில் வயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் சஜீத் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குறித்து புகாரின் பேரில், தீலா மோட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் பயன்படுத்தியது 12 போர் கொண்ட நாட்டுத் துப்பாக்கி என்பது தெரியவந்தது. தப்பியோடி மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். பழைய பகையின் காரணமாக வடகிழக்கு டெல்லியின் சீலாம்பூர் பகுதியில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இதில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த கல்லு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட ஷாநவாஸ் மற்றும் ஷகில் இருவரில் ஷாநவாஸ் ஏற்கனவே கொலை முயற்சி வழக்கில் விசாரிக்கப்பட்டு வருபவர் என போலீசார் தெரிவித்தனர். இவர்கள் மூவருக்கும் குற்றப்பின்னணி உள்ளதாகவும் கூறினர்….

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை