லாரி மோதி விவசாயி பலி

நெல்லை, ஜூன் 6: நெல்லை அருகே பைக் மீது சிமென்ட் லாரி மோதி விவசாயி பலியானார். நெல்லை மாவட்டம் தாழையூத்து, நாராயணன்நகர் 3 வது தெருவை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம்(55). விவசாயி. இவர் நேற்று காலைதனது பைக்கில் மதுரை -நாகர்கோவில் நெடுஞ்சாலையில் கங்கைகொண்டான் பகுதியில் வந்து கொண்டிருந்தார். பாப்பான்குளம் விலக்கு பகுதியில் அவர் வந்த போது எதிரே ஒன்வேயில் வந்த சிமென்ட் ஏற்றி வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த அடிபட்ட மீனாட்சிசுந்தரம் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்துக்கு காரணமான சிமென்ட் லாரியை ஓட்டி வந்த நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டிரைவர் அரவிந்த் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்