லாரியுடன் 1,350 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது: கடத்தியவர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் போலீசார், வையாவூர்  தனியார் பள்ளி அருகே நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 27 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார், லாரியுடன் 1350 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வேல்பாண்டி (40) என்பவரை கைது செய்தனர். விசாரணையில், ரேஷன் அரிசியை பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, காஞ்சிபுரம் பகுதியில் தங்கி வேலை செய்யும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார். அதற்காக கடத்தியபோது, போலீசாரிடம் சிக்கியது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

Related posts

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கூலிப்படை ஏவி தீர்த்து கட்டிய மனைவி: தர்மபுரி அருகே பரபரப்பு

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!!