லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

ஈரோடு,ஜன.7:ஈரோடு எல்லை மாரியம்மன் கோவில் அருகே உள்ள பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், அங்கு சென்று லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்த ஈரோடு வீரப்பன் சத்திரம் சு.கா.வலசு பகுதியை சேர்ந்த குமார்(43),கொத்துக்காரன் தோட்டத்தை சேர்ந்த சதீஷ்(30),கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சந்திரசேகரன்(41), முருகன்(40) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 லாட்டரி சீட்டு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம், 4 ஸ் மார்ட் போன்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், ஈரோடு மூலப்பாளையம் ஆட்டோ ஸ்டாண்ட் அரு கே லாட்டரி சீட்டு வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றதாக மூலப்பாளையம் விநாயகர் கோவில் 7வது வீதியை சேர்ந்த சுரேஷ்குமார்(35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு