லயோலா கல்லூரியில் 14 வகுப்பறைகளுடன் கூட்ட அரங்கம் சன் டி.வி. அளித்த ரூ.6.50 கோடி நிதி உதவியால் கட்டப்பட்ட முரசொலி மாறன் தளம் திறப்பு

சன் டி.வி. அளித்த 6 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி உதவியின் மூலம் சென்னை லயோலா கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்ட தளம் மாணவர்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவ சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் கூடுதல் கட்டிடங்களைக் கட்டுவதற்காக சன் டிவி 6 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்திருந்தது. அந்த நிதியின் மூலம் லயோலா கல்லூரியில் 14 நவீன வகுப்பறைகள், பேராசிரியர்களுக்கான 4 அறைகள் மற்றும் கூட்ட அரங்கு கொண்ட புதிய தளம் கட்டப்பட்டுள்ளது.  முரசொலி மாறன் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் புதிய தளத்தை மல்லிகா மாறன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியின்போது, மாணவர்களுடன் காவேரி கலாநிதி மாறன் கலந்துரையாடினார். சன் டி.வி. நிதி உதவியால் கட்டப்பட்டுள்ள புதிய தளத்தின் மூலம் 500 மாணவர்கள் பலனடைவார்கள் என்று கல்லூரி முதல்வர் டாக்டர் தாமஸ் தெரிவித்தார்.  நிகழ்ச்சியில் லயோலா கல்விக் குழுமத்தின் தலைவர் பிரான்சிஸ் சேவியர், செயலாளரும் தாளாளருமான ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏழை எளியோருக்கு கல்வி, அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல், தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக சன் டிவியும் சன் பவுண்டேஷனும் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகின்றன. இத்திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. இணைந்து இதுவரை 160 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை