லத்தூர், சித்தாமூர் ஒன்றியங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

செய்யூர்; லத்தூர் ஒன்றியத்தில் உள்ள புதுப்பட்டு மற்றும் பெரிய வெளிக்காடு ஊராட்சியில் புதிய அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு விழா நடந்தது. செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு கொள்முதல் நிலையங்களை திறந்துவைத்தார். இதில் லத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுபலட்சுமி பாபு, துணை பெரும் தலைவர் கிருஷ்ணவேணி தணிகாச்சலம், ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ராமசந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஜெயலட்சுமி மகேந்திரன், ஊராட்சி தலைவர்கள் மோகன்தாஸ், வெளிக்காடு ஏழுமலை உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சித்தாமூர் ஒன்றியம் நெற்குணம் ஊராட்சி கடப்பேரியில் நடந்த நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு கலந்து கொண்டு கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். அப்போது அப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுத்த மனுக்களை சட்டமன்ற உறுப்பினர் பெற்றுக்கொண்டு அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் சித்தாமூர் ஒன்றிய ஊராட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் நிர்மல்குமார், சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிற்றரசு, அப்பகுதி கவுன்சிலர் சிம்பு மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி