லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 9 ஆண்டு சிறை

மதுரை, மார்ச் 1: லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளருக்கு 9 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், பனையூரில் ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த 2014-15ல் 15 தெரு மின்விளக்குகள் அமைக்க வேண்டி இருந்தது. இதற்காக திட்ட மதிப்பீடு தயாரிக்க அப்போதைய ஊராட்சித் தலைவர் மாயாண்டியிடம், மின்சார வாரிய உதவி பொறியாளர் ராமமூர்த்தி ரூ.ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஊராட்சித் தலைவர் லஞ்ச ஒழிப்பு ேபாலீசில் புகார் அளித்தார். கடந்த 23.5.2014ல் ரூ.ஆயிரம் லஞ்சப்பணம் வாங்கியபோது, உதவி மின்பொறியாளர் ராமமூர்த்தி கையும், களவுமாக சிக்கினார்.இந்த வழக்கின் விசாரணை மதுரை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி பாரதிராஜா நேற்று தீர்ப்பளித்தார். அதில், ராமமூர்த்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 9 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.1,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்