ரோஜா பூங்கா வெறிச்சோடியது

ஊட்டி: ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தொடர்ந்து, தொற்று பரவல் குறைய துவங்கிய நிலையில் 4 மாதங்களுக்கு பின் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 2வது சீசனும் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க வசதியாக தாவரவியல் பூங்காவில் தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட பல்வேறு ரகமலர் செடிகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து வருகின்றனர். வார நாட்களை காட்டிலும், சனி, ஞாயிறு வார இறுதி நாட்களில் மட்டுமே சுற்றுலா தலங்களில் கூட்டம் காணப்படுகிறது. இந்த சூழலில், ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள மலர் செடிகளில் ரோஜா மலர்கள் குறைவாக உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாகவே உள்ளது….

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!