ரோகித்துக்கு கொரோனா

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. லெஸ்டர்ஷயர் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய ரோகித் முதல் இன்னிங்சில் 25 ரன் எடுத்தார். இந்நிலையில், நேற்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்தியா – இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அந்த போட்டியில் ரோகித் களமிறங்குவது கேள்விக்குறியாகி உள்ளது. ரோகித் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட் அல்லது பும்ரா கேப்டனாக செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது….

Related posts

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அசத்தல்: ஒரு நாள் போட்டியில் அபார வெற்றி

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், வருகிற நவம்பர் மாதத்தில் சவுதியில் நடைபெறலாம் என தகவல்!