ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

திருமங்கலம், ஜூலை 11: நாகை மண்டல இணைப்பதிவாளர் மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்ககோரி தமிழகம் முழுவதும் நேற்று ரேஷன்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் செல்லத்துரை தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சௌந்தரபாண்டி முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் பாக்கியம், நிர்வாகிகள் செல்வம், பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பதவி உயர்வு வழங்க மறுப்பதுடன், பூட்டிய கடையின் கதவுகளை உடைத்து திறந்து சோதனை என்ற பெயரில் பொருட்களின் இருப்பு சரியாக இருந்தும் குறைவாக இருப்பதாக எழுத சொல்லும் பணியாளர் விரோத போக்கை கடைபிடித்து வரும் நாகை மண்டல இணைப்பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ரேஷன்கடை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்: 5 பேர் மீது வழக்கு

சவுக்கை செடிகளை பிடுங்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு

கணவன் மாயம்: மனைவி புகார்