ரேஷன் கடையை பழைய இடத்திலேயே அமைக்க வேண்டும்: காந்திகிராமம் வடக்குபகுதி மக்கள் கோரிக்கை

கரூர், மார்ச் 5: கரூர் காந்திகிராமம் வடக்கு பகுதி குடியிருப்பு மக்கள் ரேஷன் கடையை மீண்டும் பழைய இடத்தில் அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக காந்திகிராமம் பகுதி மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:காந்திகிராமம் குடியிருப்பு பகுதியில் 35 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறோம். குறிப்பாக தெற்கு பகுதியில் 1000 கார்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தன. இதனை காந்திகிராமம் ரேஷன் கடைமாற்றி எங்கள் பகுதியில் திருச்சி ரோட்டின் வடக்கு பகுதியில் கிருஷ்ணாநகர், திருவிகசாலை ,ஜிஆர் நகர், முத்து நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் மருத்துவகல்லூரி எதிர்புறம் அமைந்த 500 கார்டு தாரர்கள் பயன் அடைந்து வந்தனர்.மேலும் இங்கு அரசு ஓய்வு பெற்ற பலர் மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். வயது முதிந்தவர்கள் பலர் பயன் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் ரேஷன் கடையைஎந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கடையை வேறு பகுதிக்கு மாற்றி உள்ளனர். எனவே மீண்டும் ரேஷன் கடையை பழைய இடத்தில் கடையை மாற்றி தர வேண்டும் என்று அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை