ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு: எம்எல்ஏ, திமுக மாவட்ட பொறுப்பாளர் தொடங்கி வைத்தனர்

திருத்தணி: திருத்தணி, திருவள்ளூர்  பகுதி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.  திருத்தணி பகுதி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வினியோகத்தை எம்எல்ஏ சந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி ஆகியோர் துவக்கிவைத்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார். இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.இதன்படி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவில் உள்ள 137 ரேஷன் கடைகளில் 62408 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கப்பட்டது. திருத்தணி நகரத்தில் உள்ள ரேஷன் கடைகளில் எஸ்.சந்திரன் எம்எல்ஏ, திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.பூபதி, தாசில்தார் ஜெயராணி ஆகியோர் பொங்கல் தொகுப்பு வினியோகத்தை துவக்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ‘‘பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பைகள் வழங்கப் பட்டுவிடும்’’ என்று தாசில்தார் ஜெயராணி தெரிவித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் மு.நாகன், வழக்கறிஞர் கிஷோர்ரெட்டி, திருத்தணி நகர பொறுப்பாளர்கள் வினோத்குமார், விஎஸ்.கணேசன், கஜேந்திரன், சீனிவாசன், மோகன்ராவ், அசோக்குமார், சாமிராஜ், ஷியாம்சுந்தர், சங்கர், திருத்தணி வட்ட வழங்கல் அலுவலர் தமிழ்செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர். திருவள்ளூர்:  திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில், தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவரும் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவருமான எம்.கே.ரமேஷ் தலைமை வகித்து பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார். விழாவில், கூட்டுறவு வங்கி செயலாளர் பி.சரவணன், துணைத்தலைவர் வசந்தா ரகு, வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்….

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்