ரேஷன் அரிசி கடத்தல்காரர்களின் சொத்துக்கள் கணக்கெடுப்பு: பறிமுதல் செய்ய நடவடிக்கை

நாகர்கோவில்: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க எல்லையோர மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடக்கிறது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசாரும் தீவிரமாக கண்காணித்து அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மார்த்தாண்டம் மேம்பாலம் அருகே நடத்திய வாகன சோதனையில்  டெம்போவில் கடத்தப்பட்ட 11 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிகோடு பகுதியைச் சேர்ந்த எட்வின் ஜெயசிங் (39) கைது செய்யப்பட்டார். டெம்போ உரிமையாளர் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த சலீல் குமார், தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோரை தேடி வருகிறார்கள். ரேஷன் அரிசி கடத்தல் கும்பல்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது கடத்தல் தொடர்பாக கைதாகி உள்ளவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார், யார்? என்பது பற்றியும், அவர்களின் சொத்து விபரங்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரணையை  தொடங்கி உள்ளனர். …

Related posts

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது

மோசடி வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது