ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

 

கோவை, நவ. 11: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல் குமார், பொதுவிநியோக திட்ட ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விரைந்து தீர்வு காண உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சார்பில் அரிசி கடத்தல் வழக்குகளில் கோவை சரகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மாவட்ட கலெக்டர் மற்றும் டிஆர்ஓ ஆகியோரின் உதவியுடன் ஏலம் விடப்பட்டது.

இதில், பொள்ளாச்சியில் 118 வாகனங்கள், கோவையில் 40 வாகனங்கள் என மொத்தம் 158 வாகனங்கள் மின்னணு ஏலம் விடப்பட்டு ரூ.30 லட்சத்து 33 ஆயிரத்து 580 அரசுக்கு அளிக்கப்பட்டது. தவிர, பொள்ளாச்சியில் 48 வாகனங்களும், கோவையில் 48 வாகனங்குளம் ஏலம் விடப்பட்டன. இதற்கான பணத்தை ஏலம் எடுத்தவர்கள் கட்டியவுடன் சம்மந்தப்பட்ட வாகனங்கள் இந்த மாதத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து