ரேவதி இயக்கும் படத்தில் கஜோல்

சென்னை: நடிகை, தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர், இயக்குனர் போன்ற தளங்களில் இயங்கி வருபவர் ரேவதி. கடந்த 2002ல் தேசிய விருது பெற்ற ‘மித்ரு மை பிரெண்ட்’ என்ற ஆங்கிலப் படத்தை இயக்கினார். 2004ல் ‘பிர் மிலேங்கே’ என்ற இந்தி படத்தையும், 2009ல் ‘கேரளா கஃபே’ என்ற மலையாள ஆந்தாலஜி படத்தில் ஒரு கதையையும், 2010ல் ‘மும்பை கட்டிங்’ என்ற இந்தி ஆந்தாலஜி படத்தில் ஒரு கதையையும் இயக்கி இருந்தார். பிறகு நடிப்பில் கவனம் செலுத்தினார். தற்போது ரேவதி இயக்கும் இந்தி படம், ‘சலாம் வெங்கி’. முதலில் இந்தப் படத்துக்கு ‘த லாஸ்ட் ஹுரா’ என்று பெயரிடப்பட்டு இருந்தது. ஒரு தாய் தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையப்படுத்தி, சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படை யில் உருவாகும் இப்படத்தில், சுஜாதா என்ற கேரக்டரில் கஜோல் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் லோனாவாலாவில் தொடங்கியது. இதுகுறித்து கஜோல் கூறுகையில், ‘ரேவதி சொன்ன கதைக்கு உடனடியாக சம்மதிப்பதை தவிர வேறு வழியில்லை’ என்றார். கடந்த 1997ல் தமிழில் ராஜீவ் மேனன் இயக்கத் தில் பிரபுதேவா ஜோடியாக ‘மின்சார கன வு’ படத்தில் நடித்திருந்த கஜோலுக்கு டப்பிங் பேசியவர் ரேவதி என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்