ரெய்டு பீதியில் மாங்கனி மாஜியின் அடிப்பொடிகள் தவிப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘மாங்கனி மாவட்ட மாஜி விவிஐபியின் அடிப்பொடிகள் கடந்த ஒருவாரமா தூக்கமில்லாமல் தவிச்சாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘பத்தாண்டு கால இலைக்கட்சி கவர்மெண்டுல முடிஞ்சவரை சுருட்டிட்டாங்களாம். ஆனாலும் தங்களை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாதுங்குற இறுமாப்புல இருந்திருக்காங்க. இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்ட வாக்காளபெருமக்கள் ரெண்டு தேர்தலிலும் அவர்களுக்கு சம்மட்டி அடிகொடுத்திருக்காங்க. குறிப்பா கொங்கு மண்டலமே அவர்கள் கையைவிட்டுப் போனதுல ரொம்பவே ஷாக்காயிருக்காங்களாம். இதற்கிடையில் அடுத்த ரெய்டு மாங்கனி மாஜி விவிஐபிதான் என்கிற ஸ்டராங்கான தகவல் இலைக்கட்சி நிர்வாகிகளிடம் கசிஞ்சிருக்கு. இதனால மாங்கனி மாவட்டத்துல அவரது அடிப்பொடிகள் அலார்ட்டாயிட்டாங்க. ஒருவாரமா அவர்களுக்கு நல்ல தூக்கம் என்பதே இல்லையாம். விஜிலென்ஸ் வந்தா, இந்த வீட்டுக்கா நாம வந்தோம் என்று மனசொடிஞ்சி போகுற அளவுக்கு வீட்டை சுத்தமா தொடச்சி வச்சிருந்தாங்களாம். குறிப்பா வீட்டுக்குள்ள துண்டு பேப்பர் கிடந்தா கூட, உடனே தூள்தூளா கிழிச்சதோட மட்டுமல்லாம சாம்பலா ஆக்கிக்கிட்டிருந்தாங்க. கட்சிக்காரர்கள் கூட வீட்டுப்பக்கமே வராத அளவுக்கு பார்த்துக்கிட்டாங்களாம். அவர்கள் அதிர்ச்சியோடு காத்திருந்த ரெய்டு ரெண்டாவது முறையா கொங்கு மண்டல மாஜி விஐபிக்கே போயிருக்கு. இதனால மாங்கனி இலைக்கட்சி நிர்வாகிகள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்காங்களாம். ஆனா இது தற்காலிகம் தான். நடப்பது நடந்தே தீரும், அதை யாராலும் தடுக்கவே முடியாதுன்னு மனசு புலம்புதாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘குமரி மாவட்ட கருங்கல் காவல் நிலையத்தில் மண்  கடத்தல் கும்பலுடன் போலீசார் நேரடி தொடர்பில் இருந்தது அம்பலமாகி இருக்காமே..’’ ‘‘மண் கடத்தல் தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு  புகார் தெரிவித்த வாலிபரின் செல்போன் நம்பர், வீட்டு முகவரி வரை கடத்தல்  கும்பலுக்கு போனது மட்டுமில்லாமல், பேட்டரி திருட்டு வழக்கில் அந்த வாலிபரை  சிக்க வைக்கவும் முயற்சி நடந்துள்ளது. நல்ல வேளையாக அந்த வாலிபர் திருட்டு  வழக்கில் இருந்து தப்பி உள்ளார். போலீசார் தான் முழுக்க, முழுக்க கடத்தல்  கும்பல் பின்னணியில் இருந்து பேட்டரி திருட்டு வழக்கை ஜோடிக்க உதவி  செய்திருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் திட்டம் தவிடுபொடியானதால்,  அந்த வாலிபர் வழக்கின்றி தப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.பி.  பத்ரி நாராயணன் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இதுவரை நடந்த விசாரணையில்  போலீஸ்காரங்க மட்டுமின்றி  அதிகாரி அந்தஸ்தில் உள்ளவர்கள் வரை கடத்தல்  கும்பலுடன் லிங்க்கில் இருந்துள்ளனர். மலை போல் குவியும் மாமூல் காரணமாக  தான் கடத்தல் கும்பலுக்கு உடனுக்குடன் கருங்கல் காவல் நிலையத்தில் இருந்து  உதவிகள் போய் உள்ளது. இப்போது கடத்தல் கும்பல் மீது வழக்குபதிவு  செய்தாலும், அதில் இருந்து தப்புவதற்கான வழிகளும் காவல் நிலையத்தில்  இருந்தே கூறப்படுவதாக பேசிக் கொள்கிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சம்திங் இல்லைன்னா, பில்டிங் அப்ரூவல் இல்லைன்னு கைய விரிச்சுடுவாராமே அந்த அதிகாரி..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘குயின்பேட்டை  மாவட்டத்துல, பாக்கம்னு முடியுற பேரூர் ஆட்சி, சென்னை-  பெங்களூரு தேசிய  நெடுஞ்சாலையையொட்டி அமைச்சிருக்குது. இதனால் சுற்றுப்புற  கிராமங்களைச்  சேர்ந்த மக்களும், சென்னையில தனியார் கம்பெனியில, வேலை செய்ற  மக்களும் இந்த  பேரூர் ஆட்சியில குடிபெயர்ந்து வர்றாங்க. 20  ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மக்கள் வசிச்சு வர்றாங்க.இதனால் புதியதாக  பேரூர் ஆட்சி பகுதியில, வீடு  கட்ட வர்றவங்க, அந்த பேரூராட்சியில, பெயரோட  முடிவுல கரனை கொண்டவரை, முதல்ல  கவனிக்கணுமாம். 10 கே சம்திங்கோட ேபாய்ட்டு  கவனிச்சாத்தான், பில்டிங்  அப்ரூவல் கொடுப்பாராம். சம்திங் இல்லைன்னா,  அப்ரூவல் இல்லைன்னு கைய  விரிச்சுடுவாராம். அதுமட்டுமில்லாம, பேரூர்  ஆட்சியில இருக்குற  வார்டுகளுக்கு முழுசுமாக கொசு மருந்து அடிக்காம, ஏதாவது  ஒரு பகுதியில  மட்டும் மருந்து அடிச்சுட்டு, போட்டோ எடுத்து, கலெக்டருக்கு   அனுப்பிடுவாராம்.  ஆனா, ஒட்டுமொத்த பேரூர் ஆட்சிக்கும் செலவு  செஞ்சதாக  கணக்கு காட்டி கல்லா கட்டுவாருன்னு புகார் எழுந்திருக்குது.  கபசுர  குடிநீரு, பொது மக்களுக்கு கொடுக்குறதுக்காக, ஆரம்ப சுகாதார  நிலையத்துல  இருந்து, வாங்கி வந்து, வெளியே காசு கொடுத்து வாங்குனது போல  அதுக்கும்  பில் போடுவாராம். நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக வந்த  நிதியிலயும்  கை வெச்சிருக்குறதாக சொல்றாங்க. அதோட, ஆபிசுக்கு வரும்போது,  போதையில  வர்றதாகவும், சக ஊழியர்களை வசைபாடுவதாகவும் புலம்பல் சத்தம்  கொஞ்சம் ஓவராவே  கேட்குது. இதனால, சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிங்க  விசாரிச்சு, உண்மை  நிலவரத்தை கண்டறிஞ்சு தகுந்த நடவடிக்கை எடுக்கணும்னு  கோரிக்ைக ஒலி  கேட்டுகிட்டிருக்குது’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ரவுடிங்கள கஷ்டப்பட்டு பிடிப்பதே  பெரிசு.. போலீஸ்காரங்க பிடித்துக்  கொண்டுவந்தாக்கூட உதவி ஆய்வாளர் ஒருவர்  போன் போட்டு அவங்கள  விட்டுவிடுங்கன்னு சொல்றாராமே’’ என கேள்வியெழுப்பினார்  பீட்டர் மாமா..‘‘அயனாவரம் ஐசிஎப், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில்  மீண்டும் ரவுடிகள்  சிலர் தலைதூக்க ஆரம்பித்துள்ளார்களாம். சமீபத்தில்  விடுதலை சிறுத்தைகள்  கட்சியை சேர்ந்த மாவட்ட பொறுப்பில் உள்ள ஒருத்தரை கொலை  வழக்கில்  சம்பந்தப்பட்ட ஒரு ரவுடி கடுமையா தாக்கியுள்ளார். அயனாவரம்  போலீசார்  வழக்குப்பதிவு செய்து அந்த ரவுடி மீது வழக்குப்பதிவு செய்து   தேடினாங்களாம்… ஐசிஎப் காவல் நிலையத்தில் பணிபுரியும் அதிரடி கிரிக்கெட்   வீரர் பெயரைக் கொண்ட உதவி ஆய்வாளர் ஒருவர் சம்பந்தப்பட்ட காவல்  நிலையத்தின்  முக்கிய நபரை தொடர்பு கொண்டு அந்த ரவுடியை விட்டுடுங்க…  என்று சிபாரிசு  செய்கிறாராம். ஏற்கனவே இதுபோல சில ரவுடிகளுக்கும் சிபாரிசு   செய்துள்ளாராம்..  இதனால நொந்து போன அயனாவரம் போலீசார் அதையும் மீறி   வழக்குப்பதிவு செய்து உள்ளார்களாம்.. குறிப்பிட்ட அந்த ரவுடி மீது பல்வேறு   வழக்குகள் இருந்தும் இதுவரை சரித்திரப் பதிவேடு குற்றவாளி லிஸ்ட்டில்  பெயர்  இடம்பெறவில்லையாம். சில காவல் நிலையங்களில் என்ன நடக்கிறது என்றே   தெரியவில்லைன்னும் அயனாவரம் போலீசார் நொந்து கொண்டார்கள்’’ என்றார் விக்கியானந்தா….

Related posts

தேனிக்காரர் ஆதரவு மாஜி அமைச்சரை திரைமறைவில் கண்காணிக்கும் சேலத்துக்காரர் டீம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சேலத்துக்காரர் டீம் மேல் சீற்றத்துடன் இருக்கும் மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கட்சி நிர்வாகிகளை கண்காணிக்க குழு போடும் முடிவில் இருக்கும் இலை தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா