ரெனால்ட் 4

ரெனால்ட் நிறுவனம், பாரீஸ் நகரில் நடந்த மோட்டார் கண்காட்சியில், ரெனால்ட் 4 எலக்ட்ரிக் காரை காட்சிப்படுத்தியுள்ளது. பழமையான மாடலில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார், அனைத்து வித சாலைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கேப்டர் காரை விட சிறிதாகவும், அதேநேரத்தில் வெளிநாட்டு சந்தையில் உள்ள இந்த நிறுவனத்தின் கிளியோ காரை விட பெரிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புற வடிவமைப்பை இந்த நிறுவனம் வெளியிடவில்லை. இதில் 42 கிலோவாட் அவர் நிக்கல் கோபால்ட் மெக்னீசியம் பேட்டரி இடம்பெற்றுள்ளது. ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 402 கி.மீ தூரம் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பூஜ்யத்தில் இருந்து 100 கி.மீ வேகத்தை 10 நொடிகளில் எட்டிவிடும் என கூறப்படுகிறது. இந்தியச்சந்தைக்கு இந்த கார் சந்தைப்படுத்தப்படுமா என்ற விவரத்தை ரெனால்ட் வெளியிடவில்லை….

Related posts

பிஎம்டபிள்யூ சிஇ 04

ஜிடி டெக்சா எலக்ட்ரிக் பைக்

பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்