ரூ5 கோடி ரொக்கம்; ரூ5 கோடி மதிப்புள்ள கடையை கொடு: பலாத்கார மிரட்டல் விடுத்த அமைச்சரின் 2வது மனைவியின் சகோதரி கைது

மும்பை: மகாராஷ்டிரா அமைச்சரிடம் ரூ. 5 கோடி ரொக்கம், ரூ. 5 கோடி மதிப்புள்ள கடையை கேட்டு பலாத்கார மிரட்டல் விடுத்த அவரது இரண்டாவது மனைவியின் சகோதரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அதனால் அமைச்சர் நிம்மதி அடைந்துள்ளார். மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசில்  கேபினட் அமைச்சராக இருக்கும் மூத்த ேதசியவாத காங்கிரஸ் தலைவர் தனஞ்சய் முண்டேவை, கடந்த சில வாரங்களுக்கு முன் போனில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், ரூ. 5 கோடி மதிப்புள்ள கடை மற்றும் விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றை கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், சமூக ஊடகங்களின் மூலம் அவதூறு மற்றும் பாலியல் பலாத்காரம் பதிவுகளை வெளியிடுவதாக அந்தப் பெண் மிரட்டினார். அதிர்ச்சியடைந்த அமைச்சர், தனது அரசியல் வாழ்க்கையை அந்தப் பெண் அழித்துவிடுவாரோ என்ற அச்சத்தில் அறிமுகமான ஒருவர் மூலம்  ரூ.3 லட்சத்தையும், ரூ.1.42 லட்சம் மதிப்பிலான செல்போனையும் ெகாடுத்து அனுப்பி உள்ளார். இருந்தும் அந்தப்  பெண் மீண்டும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதில், ‘அமைச்சர் பதவியைக் காப்பாற்ற வேண்டும் என்றால் ரூ.5 கோடி ரொக்கமும், ரூ.5 கோடி மதிப்புள்ள  கடையும் கொடுக்க வேண்டும்’ என்று கேட்டுள்ளார். மீண்டும் அந்தப் பெண்  மிரட்டியதால் வேறுவழியின்றி மும்பை மலபார் ஹில் காவல் நிலையத்தில் அமைச்சர் தனஞ்சய் முண்டே புகார் அளித்தார். அதில், ‘ரேணு சர்மா (40) என்ற பெண் என்னிடம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுகிறார். பணத்தைக் கொடுக்க தவறினால் என் மீது பாலியல் பலாத்கார புகார் அளிக்க உள்ளதாக அச்சுறுத்துகிறார்’ என்று தெரிவித்திருந்தார். இதன்பேரில் மும்பை குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்த ரேணு சர்மாவை கைது செய்தனர். பின்னர், அவரை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மும்பை அழைத்து வந்தனர்.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘அமைச்சர் தனஞ்சய் முண்டேயிடம் அந்தப் பெண் ரூ.5 கோடி ரொக்கம், ரூ.5 கோடி மதிப்பிலான கடை, செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களைக் கேட்டுள்ளார். ஆரம்பத்தில் ரூ.3 லட்சத்தையும், ரூ.1.42 லட்சம் மதிப்பிலான செல்போன் ஆகிய பொருட்களை வேறொரு நபர் மூலம் அந்தப் பெண்ணிடம் வழங்கியுள்ளார். அமைச்சரின் முதல் மனைவியின் பெயர் ராஜ. இவரைதான் சட்டப்படி திருமணம் செய்து கொண்டார். அப்புறம் கருணா ஷர்மா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தனது இரண்டாவது மனைவியான கருணா சர்மாவின் சகோதரிதான் ரேணு சர்மா. பாடகியான ரேணு சர்மாவுக்கும், அமைச்சருக்கும் நீண்ட நாட்களாக ரகசிய உறவு இருந்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே குடும்ப பிரச்னைகள் இருந்தன. தற்போது மிரட்டல் புகார் கொடுத்துள்ளதால் ரேணு சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்’ என்று அவர்கள் கூறினர். ரேணு சர்மாவின் டார்ச்சரால் தனது அமைச்சர் பதவி போய்விடுமோ என்ற அச்சத்தில் தனஞ்சய் முண்டே இருந்த நிலையில், தற்போது அந்தப் பெண்ணே தானாக வழியில் வந்து மாட்டிக் கொண்டதால் அமைச்சர் நிம்மதி அடைந்துள்ளார். அதனால் அவரது அமைச்சர் பதவி தப்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.25 வருஷமா எனக்கும் அவருக்கும் உறவு இருக்கு…கருணா ஷர்மாவின் சகோதரி ரேணு சர்மா, கடந்த மாதம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தனஞ்சய் முண்டேவுடன் கடந்த 25 ஆண்டுகளாக உறவு வைத்திருந்தேன். ஆனால், திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் மூலம் எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. ஏற்கனவே அவர் பல திருமண மோசடிகளை செய்துள்ளார். அவருக்கு மொத்தம் ஆறு குழந்தைகள் உள்ளன. என் சகோதரி கருணா சர்மா, கடந்தாண்டு செப்டம்பரில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த 2006ம் ஆண்டு முதல் அவர் (தனஞ்சய் முண்டே) மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளித்தேன். ஆனால் மும்பை போலீசார் எனது புகாரை ஏற்க மறுத்துவிட்டனர்’ என்று தெரிவித்திருந்தார். தொல்லையை சகிக்க முடியல…பாலியல் மிரட்டல் விடுத்த ரேணு சர்மா கைது செய்யப்பட்டது குறித்து பீட் மாவட்டத்தில் இருந்த அமைச்சர் தனஞ்சய் முண்டே  செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘சுமார் 2 ஆண்டுகளாக அந்தப் பெண் எனக்கு  தொல்லை கொடுத்தார். இதற்கு முன்பும் அவர் என் மீது போலீசில் புகார் கொடுத்தார்.  பின்னர் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். அவரது தொல்லையை சகிக்க  முடியாமல்தான் தற்போது போலீசில் புகார் அளித்தேன். புகார் மனுவுடன்  என்னிடம் இருந்த அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளேன். இனி சட்டம் தன்  கடமையைச் செய்யும். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை வரவேற்கிறேன்’ என்றார்….

Related posts

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து