ரூ2 கோடி சொகுசு படகு மூழ்கியது

தவளக்குப்பம்: புதுச்சேரி நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் சுற்றுலா வளர்ச்சி கழகம் (பிடிடிசி) சார்பில் படகு குழாம் செயல்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளை ஈர்க்க அங்கு, மந்த்ரா போட் ஹவுஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, சொகுசு படகு வீடு இயக்கப்பட்டது. சென்னையை சேர்ந்த அனு என்பவருக்கு சொந்தமான இப்படகை ஒப்பந்த அடிப்படையில் இயக்கி வந்தனர். இதில் வரும் வருவாய் பங்கிட்டு  கொள்ளப்பட்டு வந்தது. இப்படகில் பயணிக்க 24 மணி நேரத்திற்கு ஓர் அறையில் இரு நபர்களுக்கு, உணவு உள்பட ரூ.10 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. கூடுதலாக ஒரு நபர் தங்க ரூ.2,500 கட்டணம் வசூலித்தனர். ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த சொகுசு படகு, கொரோனா பரவல் காரணமாக இயக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே, சுண்ணாம்பாற்றில் நிறுத்தி வைத்திருந்த  இந்த சொகுசு படகை அனுமதியின்றி எடுத்துச் சென்று விட்டதாக கடந்த ஜனவரியில் பிடிடிசி சார்பில் அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஒப்பந்த காலம் முடிந்த பிறகு, படகை சரி செய்வதற்காக, குமாரவேல் என்பவர் எடுத்துச் சென்று, அருகில் உள்ள தனியார் படகு குழாமில் நிறுத்தி வைத்திருப்பது தெரிய வந்தது. அரியாங்குப்பம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்த நிலையில், படகு நோணாங்குப்பம் ஆற்றின் நடுவில் நங்கூரமிட்டு கட்டி வைக்கப்பட்டிருந்தது. காற்று பலமாக வீசியதில் நேற்று இரவு முதல் படகு ஆற்று நீரில் மூழ்க ஆரம்பித்தது. நேற்று, பாதி படகு மட்டுமே வெளியில் தெரியும் அளவுக்கு மூழ்கி விட்டது. படகை மீட்க சுற்றுலாத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்….

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்