ரூ.7 லட்சம் செலவில் நாய்க்கு பிறந்த நாள் : கொரோனா விதிமீறி கொண்டாடியதால் 3 பேர் கைது

அகமதாபாத்: வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே மக்கள் பார்ப்பதுண்டு. அவர்களின் அளவு கடந்த பாசத்தினால் செல்லபிராணிகளின் ஸ்பெஷல் நாளை தடபுடலாக விழா எடுத்து கொண்டாடுவதும் உண்டு. அந்த வகையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் வசித்து வரும் குடும்பம் ஒன்று தங்கள் வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்பு நாயின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியதற்காக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றனர். இந்த நாயின்  பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக 7 லட்ச ரூபாயை அந்த குடும்பம் செலவு செய்துள்ளது. அதற்கென நிக்கோல் என்ற இடத்தை வாடகைக்கு எடுத்து, அதில் கூடாரம் அமைத்து பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. அதோடு விழாவில் கலந்து கொள்ளும் வகையில் பல மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நாயின் புகைப்படத்தை கொண்டு உள் அலங்கார வேலைகளும் நடந்துள்ளன. விழாவில் அந்த நாய்க்கு கருப்பு நிற துணி அணியப்பட்டது. இருப்பினும் இந்த விழாவில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் விழாவில் பங்கேற்ற பலர் மாஸ்க் அணியவில்லை என்பதால் 3 பேர் கைது செய்யப்பட்டனர். …

Related posts

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் எதிரொலி; சுரங்கத்துறை முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் தீ வைத்து எரிப்பு: கார் டிரைவர்கள் சிக்கினர்

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்