ரூ.52 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் எம்.பி திறந்து வைத்தார்

மதுரை, மார்ச் 14: மதுரை எம்.பி வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதியில், மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில ்முடிவுக்கு வந்த பணிகளின் தொடக்க விழா தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்படி, கலெக்டர் அலுவலகம் செல்லும் டாக்டர் தங்கராஜ் சாலையில் படிப்பக வளாகம், உணவருந்தும் கூடம் விரிவாக்க பணிகள் மற்றும் உயர் கோபுர மின்விளக்கு, யாகப்பா நகரில் போர்வெல் மற்றும் தண்ணீர் ெதாட்டி, வண்டியூரில் நூலகம் அருகே உயர்கோபுர மின்விளக்கு ஆகியவை அமைக்கப்பட்டன. அதேபோல் உத்தங்குடி பாண்டிகோயில் சாலையில் போர்வெல் மற்றும் தண்ணீர் ெதாட்டி அமைக்கப்பட்டது. இதன்படி பல்வேறு இடங்களில் முடிவுக்கு வந்துள்ள ரூ.52.20 லட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சித்திட்ட பணிகளின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இவற்றை எம்.பி வெங்கடேசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி