ரூ.5,000 கேட்டு ரூ.3,500 லஞ்சம் வாங்கினார் பணத்தை டாய்லெட்டில் போட்ட கூட்டுறவு வங்கி செயலர் கைது: 2 மணி நேரம் போராடி மீட்ட போலீஸ்

அரூர்:  தர்மபுரி மாவட்டம் அரூர் கீழ்பாட்சாபேட்டையில் கேகே 140 அரூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நிலவள வங்கி) செயலராக முருகன்(50) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த வங்கியில், 1982ல் அரூர் அருகே கோட்டப்பட்டியை சேர்ந்த விவசாயி நாகராஜன் (57) என்பவர் டிராக்டர் வாங்குவதற்காக ₹63 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதனை 1987ல் திருப்பி செலுத்தி விட்டார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடன் முடித்த சான்றிதழை வாங்க வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது, ₹5,000 கேட்டு பின்னர் ₹3,500 கொடுத்தால்தான் சான்றிதழ் தரமுடியும் என செயலர் தெரிவித்துள்ளார்.ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜன், தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். பின்னர் போலீசாரின் அறிவுரையின் பேரில் நேற்று ரசாயனம் தடவிய ₹3,500 பணத்தை எடுத்துச் சென்று முருகனை சந்தித்து கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பிடித்தனர். ஆனால், அவரிடம் பணம் இல்லை. விசாரணையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்ததை அறிந்து கொண்டதும் கழிவறைக்கு சென்ற முருகன் அந்த பணத்தை டாய்லெட்டில் போட்டு தண்ணீர் ஊற்றிவிட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பேரூராட்சி பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரம் போராடி பணத்தை மீட்டனர். இதுதொடர்பாக தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்