ரூ.4 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள்: கலெக்டர், எம்எல்ஏ வழங்கினர்

திருவள்ளூர்: பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹4 லட்சத்து 73 ஆயிரத்து 100 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனங்களை ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது 2021-2022ம் நிதி ஆண்டிற்கு பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் 6 பயனாளிகளுக்கு தலா ₹78 ஆயிரத்து 500 வீதம், ₹4 லட்சத்து 73 ஆயிரத்து 100 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனங்களை வழங்கினார். அதன்படி பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட காக்களூர் கிராமத்தை சேர்ந்த குமார், கிளாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரகுநாதன், கொட்டாமேடு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், அருந்ததிபாளையம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி, சோரஞ்சேரியை சேர்ந்த ஈஸ்வரி, பாரிவாக்கத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகிய மாற்றுத்திறனாளிகள் 6 பேருக்கு இந்த இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேசிங்கு, திமுக ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், வழக்கறிஞர் சின்னா (எ) வித்யாசாகர், ஊராட்சி தலைவர்கள் சொக்கலிங்கம், தமிழ்ச்செல்வி, காக்களூர் சுகுமாரன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு