ரூ.4 கோடி மதிப்பு சொத்து அபகரிப்பு: மகன்கள் மீது தந்தை புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர், ஜே.என்.சாலையை சேர்ந்தவர் லட்சுமணன்(68). இவரது மகன்கள் சீனிவாசன்(42), ராஜகணபதி(39). மகன்களுக்கு ஜெ.என்.சாலையில் ஒரு இடத்தை வாங்கியுள்ளார். இந்த சொத்தை கடந்த 2016ல் அவர்களுக்கு பிரித்து கொடுக்கலாம் என முடிவு செய்தார். இந்நிலையில், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, மருத்துவமனை செலவுக்காக ஒரு சொத்தை விற்பனை செய்வதற்காக முடிவு செய்து அதற்கான பத்திரத்தை தயார் செய்தார். அப்போது நகரின் மையப்பகுதியில் முக்கிய சாலையில் உள்ள ₹4 கோடி மதிப்பிலான சொத்தையும் பொய்யான தகவல்களை சொல்லி கையெழுத்து வாங்கி தானமாக வழங்கியதாக மகன்கள் பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மகன்களிடம் விசாரித்தபோது தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டி, தனது மனைவியிடமும் பொய்யான தகவல்களை கூறி தன்னிடமிருந்து பிரித்து விட்டனர். அதோடு, தன்னை வெளியே துரத்தி விட்டதால், தற்போது சாப்பாட்டுக்கே மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார். தான் சுயமாக சம்பாதித்து சேர்த்த சொத்தை மோசடி செய்து எழுதி வாங்கிய மகன்களிடமிருந்து அந்த சொத்தை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்….

Related posts

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட பட்டாசு ரசாயனம் பறிமுதல்

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது