ரூ.32 ஆயிரம் குட்கா பறிமுதல்: வியாபாரி கைது

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த காரணிமண்டபம் கிராமத்தில்  பல்பொருள் அங்காடி ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக உத்திரமேரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர சோதனையிட்டனர். அப்போது காரணிமண்டபம் கிராமத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் சுமார் 4500 பாக்கெட்டுகள் கொண்ட ரூ.32 ஆயிரம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா பாக்கெட்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கிருந்த பான்மசாலா மற்றும் குட்கா பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடை உரிமையாளர் ஆதிராசன் (39) என்பவரை கைது செய்தனர்….

Related posts

அதிமுக ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்: 24 பேர் மீது வழக்கு

காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு: 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!