ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கோரி மனு

மதுரை: வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரிடம் விருதுநகரை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரவீந்திரன் விருதுநகர் போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் விஜய நல்லதம்பியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், செப். 25ம் தேதி காவல் கண்காணிப்பாளர் முன்பாக ஆஜராகி பணத்தை திரும்ப தருவதாக உறுதி அளித்தார். இதனிடையே, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பலருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி தன்னிடம் ரூ.3 கோடி வரை வாங்கி ஏமாற்றிவிட்டதாக, விஜயநல்லதம்பி திடீரென புகார் அளித்தார். இதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திரபாலாஜி ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்