ரூ.22 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான தோப்பு மற்றும் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு வந்தது. இதுகுறித்து திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில் கோட்டாட்சியர் ரமேஷ் மேற்பார்வையில் வட்டாட்சியர் செந்தில்குமார் அம்மணம்பாக்கம் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசுக்கு சொந்தமான தோப்பு மற்றும் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு வருவதை கண்டுபிடித்தார். உடனடியாக பொக்லைன் இயந்திரம் மூலம் புதிதாக கட்டப்பட்டு வரும் 3 குடிசை வீடுகளை அகற்றினார். மேலும் அங்கு அரசுக்கு சொந்தமான தோப்பு மற்றும் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகளை குடியிருப்போருக்கு 10 நாட்கள் அவகாசம் கொடுத்து எச்சரித்தார். ரூ.22 லட்சம் மதிப்பிலான அரசு தோப்பு புறம்போக்கு நிலத்தை மீட்கப்பட்டதாக வட்டாட்சியர் தெரிவித்தார்….

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்