ரூ.21.29 லட்சம் வாங்கி மோசடி: ஒரு ஆண்டுக்கு பின் ஒருவர் கைது

தண்டையார்பேட்டை: சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஷேக் மொய்தீன் (40). திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை சேர்ந்தவர் கவுஸ்  பாஷா (42). வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி தெருதெருவாக விற்பனை செய்யும் வேலை செய்து வருகிறார். இவர், தொழிலை விரிவுபடுத்த  கடந்த 2020 முதல் அவ்வப்போது ஷேக் மொய்தீனிடம் கடன் வாங்கியுள்ளார். மொத்தமாக 21 லட்சத்து 29 ஆயிரம் வாங்கியுள்ளார். கடனாக வாங்கிய பணத்தை 2021 வரை கொடுக்காமல் கவுஸ்பாஷா காலம் கடத்தி வந்துள்ளார். இதனிடையே, பணத்தை திரும்பி தரும்படி கேட்டபோது ஷேக் மொய்தீனை மிரட்டியுள்ளார். இதுகுறித்து ராயபுரம் குற்றப்பிரிவு போலீசில்  கடந்த 2012ல் ஷேக் மொய்தீன்  புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கவுஸ்பாஷை தேடி வந்தனர். இந்நிலையில் திருநின்றவூர் பகுதியில் கவுஸ்பாஷா சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பிறகு கவுஸ்பாஷாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். …

Related posts

14 ஆண்டு தலைமறைவு குற்றவாளி கர்நாடகாவில் கைது

ஆந்திராவில் இருந்து பைக்கில் போடி பகுதிக்கு கடத்தி வரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல்

மகாராஷ்டிரா, குஜராத் கால்சென்டர்களில் சிபிஐ சோதனை: 26 சைபர் குற்றவாளிகள் கைது