ரூ.21 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம்

 

வெள்ளகோவில், ஜூலை 21: வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சூரியகாந்தி விதை ஏலம் நேற்று நடந்தது. இதில் வாகரை, காவலப்பட்டி, விராலிபட்டி, சுள்ளெரும்பு, கொத்தயம், வள்ளிபட்டி பகுதிகளை சேர்ந்த 50 விவசாயிகள் 45 டன் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் அதிகபட்சமாக ஒருகிலோ சூரியகாந்தி விதை ரூ.51.39 காசுக்கும், குறைந்தபட்சமாக ரூ.42.89 காசுக்கும், சராசரியாக ரூ. 47.52 காசுக்கும் ஏலம் போனது. மொத்தமாக 45 ஆயிரத்து 87 கிலோ எடையிலான சூரியகாந்தி விதை 21 லட்சத்து 46 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்பனையானது.

Related posts

திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு

அரசு அலுவலகங்களில் ‘தமிழ் வாழ்க’ மின்னொளி பெயர்ப்பலகை பழுது: சீரமைக்க கோரிக்கை

மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்