ரூ.2.34 கோடி போதைப்பொருள் தூத்துக்குடியில் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு பகுதியில்உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்த சில அட்டை பெட்டிகளை சோதனையிட்டனர். அதில் பெட்டியின் மேல் பகுதியில் டி.சர்ட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பெட்டியின் அடியில் பாலித்தீன் கவர்களில் பேக்கிங் செய்யப்பட்ட வெள்ளை நிறமாவு போன்ற பொருள் இருந்தது. ஆய்வக பரிசோதனையில் அந்த வெள்ளை நிற பொருள் போதை பொருளான ‘‘பெஸ்டோ எபிடெர்ன்’ என தெரியவந்தது. இதனையடுத்து 23 பாக்கெட்டுகளில் இருந்த 23 கிலோ எடையிலான பெஸ்டோ எபிடெர்ன் என்ற போதை பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.2.34 கோடி. அதிகாரிகள் வருவதையறிந்து அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். இது தொடர்பாக சிலரை தேடி வரும் அதிகாரிகள் இந்த பெஸ்டோ எபிடெர்னை டி.சர்ட்டுக்குள் மறைத்து  எந்த வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய இருந்தனர் என்றும், இது எங்கிருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்டது என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

63 வயது மனைவியை குத்தி கொன்ற 72 வயது கணவர்

12 டூவீலர்களை திருடிய ‘கோடீஸ்வரர்’ கைது: பல கோடி சொத்துக்கு அதிபதி

தாயுடன் கள்ளத்தொடர்பு; விவசாயி கொன்று வீச்சு: வாலிபர் கைது