ரூ.19 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா திறப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ரூ.19 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி நகராட்சி 4வது வார்டு பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.19 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் பரிதா நவாப் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி சிறுவர் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். விழாவில், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் வசந்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், சுனில் குமார், பிர்தோஸ்கான், பரந்தாமன், மதன்ராஜ், தேன்மொழி மாதேஷ், செயற்பொறியாளர் சேகரன், ஜெரினா, முனியம்மா, ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை