ரூ.102 கோடியில் போலி பில் தயாரித்து ஜி.எஸ்.டி. செலுத்தாமல் ஏமாற்றியவர் கைது

 

கோவை,ஜூன்8: கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு, ஜி.எஸ்.டி. மோசடி பில் செய்யப்படுகிறதா என்பது குறித்து கோவை மண்டல ஜிஎஸ்டி உளவுத்துறை பொது இயக்குனரக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.அதன்படி அதிகாரிகள் கொண்ட குழுவினர் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் ரூ.102 கோடியில் போலி பில் தயாரித்து அரசுக்கு ஜி.எஸ்.டி. செலுத்தாமல் ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும், அந்த நபரிடம் இருந்து பிரிண்டர், 17 நபர்களின் பான் கார்டுகள்,20 பேரின் ஆதார் அட்டை,21 வங்கி கணக்குகளின் பாஸ்புக்,41 வங்கி கணக்குகளின் காசோலை புத்தகங்கள்,16 வெவ்வேறு நிறுவனங்களின் முத்திரைகள்,பல செல்போன்கள், இ-வே பில்கள், சிம்கார்டுகள், டெபிட் கார்டுகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை