ரூ.10 கோடியில் உருவான படம் ரூ. 200 கோடி வசூலை குவித்த காந்தாரா

பெங்களூர்: வெறும் ரூ.10 கோடியில் தயாரான ரிஷப் ஷெட்டியின் காந்தாரா படம் ரூ.200 கோடி வசூலை உலகம் முழுவதும் குவித்துள்ளது. கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி, இயக்கி ஹீரோவாக நடித்த படம் காந்தாரா. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் இளைஞனின் கதை இது. இப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வந்தது. படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. கன்னட படமாக முதல் வாரத்தில் இப்படம் ரூ.50 கோடியை வசூலித்து, பாக்ஸ் ஆபீசில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இப்படத்துக்கு மற்ற மாநிலங்களில் டிமாண்ட் ஏற்பட்டது. உடனடியாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளில் டப் செய்யப்பட்டு படம் வெளியானது. இதுவரை இப்படம் உலகம் முழுவதும் கன்னடத்தில் ரூ.128 கோடி வசூலித்துள்ளது. அடுத்ததாக இந்தியில் ரூ.30 கோடியும் தெலுங்கில் ரூ.21 கோடியும் வசூலித்துள்ளது. தமிழில் ரூ.14 கோடி, மலையாளத்தில் ரூ.8 கோடி வசூலித்துள்ளது. மொத்தமாக இதுவரை ரூ.201 கோடி வசூலை இந்த படம் பார்த்துள்ளது. காந்தாரா வெளியான அதே நாளில் வெளியான படம் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன். காந்தாரா படம் மக்கள் வரை சென்றடைய சில நாட்கள் ஆனது. அதற்குள் பொன்னியின் செல்வன் படம் ரூ.400 கோடி வசூலை விரைவாக குவித்துவிட்டது. ஆனால், அதற்கு பிறகு பொன்னியின் செல்வன் வசூலை குவிப்பதில் தடுமாற காந்தாரா படம்தான் காரணம். பொன்னியின் செல்வன் படத்துக்கு வட இந்தியாவிலும் ஆந்திரா, தெலங்கானாவிலும் மற்றும் உலக மார்க்கெட்டிலும் கடுமையான சவாலாக காந்தாரா படம் அமைந்துவிட்டது என டிரேட் ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்….

Related posts

டெல்லியில் அதிகாரிகளுக்கான விடுமுறை ரத்து!!

ஐதராபாத் எம்பியான ஒவைசியின் வீட்டின் மீது கறுப்பு மை வீச்சு: அமித் ஷா, ஓம் பிர்லா மீது அதிருப்தி

உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து விடுதலையானார் ஹேமந்த் சோரன்..!!