ரூ.1.85 கோடியில் புதிய தார் சாலை: க.சுந்தர் எம்எல்ஏ துவங்கி வைத்தார்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சி அரசன் நகர், ஜெயம் நகர், ராஜா நகர், முத்து கிருஷ்ணா அவின்யூ ஆகிய பகுதிகளில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது.  உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் லதா தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாரிவள்ளல், ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு புதிய தார் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும், புதிதாக அமைக்கும் சாலை தரமானதாகவும், பொது மக்களுக்கு இடையூறு இன்றி விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.இதில், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி குணசேகரன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சி தனலட்சுமி நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள பூங்கா, உரிய பராமரிப்பின்றி கழிவுநீர் தேங்கும் இடமாக உள்ளது. இதனை சீரமைத்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள், அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் ₹13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, பூங்காவை மேம்படுத்தும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. எம்பி செல்வம், எம்எல்ஏ க.சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு, பூங்காவை சீரமைப்பதற்கான அடிக்கல் நாட்டி 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் செயல்பட உள்ள பணியை துவக்கி வைத்தனர். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமா, பேரூர் செயலாளர் பாண்டியன், தியாகராஜன், செம்பியன், ரவி, வாசன், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வெங்காடு ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு வெங்காடு, இரும்பேடு, கருணாகரச்சேரி, மேட்டு கொளத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியை ஒட்டி  பாலியம்மன் கோயில் குளம் உள்ளது. பள்ளி குழந்தைகள் விளையாடும்போது குளத்தில் தவறி விழுந்து பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், பெற்றோர்கள் மிகவும் அச்சமடைந்தனர். எனவே, அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.இதைதொடர்ந்து, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ₹24 லட்சம் மதிப்பில் பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து, சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை, வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் நேற்று நேரில் பார்வையிட்டார். ஊராட்சி செயலர் தணிகாசலம் உள்பட பலர் உடன் இருந்தனர்….

Related posts

கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

குமரியில் மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்திய 33 பேர் மீது வழக்கு பதிவு