ரூ.1.44 கோடிக்கு கொப்பரை ஏலம்

 

ஈரோடு, மே 31: பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1.44 கோடிக்கு நேற்று முன் தினம் கொப்பரை விற்பனை நடைபெற்றது. பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன் கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று முன் தினம் நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 3,550 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

இதில் முதல் தர கொப்பரைகள் குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 81.81 க்கும், அதிகபட்சமாக ரூ. 96.79க்கும் விற்பனையாகின. இரண்டாம் தர கொப்பரைகள் குறைந்த பட்சமாக கிலோ ரூ. 9.99க்கும், அதிகபட்சமாக ரூ. 88.00க்கும் விற்பனையாகின. மொத்தம் 1 லட்சத்து 66 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின. இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ. 1 கோடியே 44 லட்சம் ஆகும். என விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு