ரூ.1.40 கோடிக்கு கொப்பரை ஏலம்

 

ஈரோடு: பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று முன் தினம் நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 2,565 மூட்டைகள் கொப்பரை கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் முதல் தரக் கொப்பரைகள் 1,435 மூட்டைகள் வரப் பெற்றிருந்தன. இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 78.99க்கும், அதிகபட்சமாக ரூ. 87.59க்கும் விற்பனையாகின.

இரண்டாம் தரக் கொப்பரைகள் 1,130 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 20.25க்கும், அதிகபட்சமாக ரூ. 82.73க்கும் விற்பனையாகின. இதில், மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின.இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ. 1 கோடியே 40 லட்சம் ஆகும் என விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து காவலர்களுடன் இணைந்து விபத்து, வாகன நெரிசலை குறைக்க உதவும் சட்டம் – ஒழுங்கு போலீசார்:  குற்ற சம்பவங்களும் குறைந்தது  வாகன ஓட்டிகள் பாராட்டு

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பிளாஸ்டிக் பைகள் சப்ளை செய்தவர் வீட்டுக்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

மலேசியாவுக்கு கடத்த முயன்ற 160 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: சென்னை பயணி கைது