ரூ.1.16 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

 

காங்கயம்,மே 7: காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் நேற்று விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1259 கிலோ தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்துக்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.94.10 க்கும், குறைந்த பட்சமாக ரூ.65 க்கும், சராசரியாக ரூ.92.10 க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மாரியப்பன் செய்திருந்தார்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்