ராயக்கோட்டை நர்சரிகளில் நாற்றுகள் விற்பனை மந்தம்

ராயக்கோட்டை, நவ.23: ராயக்கோட்டை பகுதியில் உள்ள நர்சரி பண்ணைகளில் நாற்று விற்பனை மந்தமடைந்து உள்ளது. ஒரு ரூபாய்க்கு விற்பனையான பூ மற்றும் காய்கறி நாற்றுகள், நேற்று 50 பைசாவுக்கு விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பூ மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்யும் நர்சரி பண்ணைகள் ஏராளமாக உள்ளன. பூக்கள், காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால் மார்க்கெட்டில் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் புதிதாக சாகுபடியில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் இங்குள்ள நர்சரி பண்ணையில், பூ மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. நாற்று விதை நட்ட 75 நாட்களில் வளர்ச்சியடைந்து விடும். இந்த நாற்றுகளை 90 நாட்கள் வரை விற்பனை செய்ய முடியும். அதற்கு மேலான நாற்றுகள் பயன்படாது. தேவை அதிகரிக்கும் போது, பூ மற்றும் காய்கறி நாற்று ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விவசாயிகள் சாகுபடியில் ஆர்வம் காட்டாததால், நாற்றுகள் விலை சரிந்துள்ளது. சொற்ப அளவிலான விவசாயிகள் நாற்றுகளை 50 பைசாவுக்கு வாங்கிச்செல்கின்றனர். பல நர்சரி பண்ணைகளில் தக்காளி, பச்சை மிளகாய், பூக்கள் என விதவிதமான நாற்றுகளை உற்பத்தி செய்து வீணாகி உள்ளது.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து