ராயக்கோட்டையில் தக்காளி நாற்று உற்பத்தி மும்முரம்: பண்ணையாளர்கள் ஆர்வம்

ராயக்கோட்டை: ராயக்கோட்டையில், விலை உயர்வால் தக்காளி நாற்று உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதங்களாக தக்காளி விலை வீழ்ச்சியடைந்தது. இதனால் பறிப்பு கூலிக்கு கூட கட்டுப்படியாகாது என நினைத்த விவசாயிகள், மாற்று பயிரில் ஆர்வம் காட்டினர். தற்போது, தக்காளி விலை உயர்ந்து வருவதால், மீண்டும் தக்காளி பயிரிட துவங்கி உள்ளனர். அதனை தொடர்ந்து நாற்றுப் பண்ணையாளர்களும், தக்காளி நாற்றுகளை உற்பத்தி செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். கடந்த மாதங்களில் தக்காளி விலை வீழ்ச்சியால் நஷ்டமடைந்த நாற்று பண்ணையாளர்கள், இப்போது உற்பத்தி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தக்காளி விதை நட்டு அது முளைத்து 25 நாட்களில் விற்பனைக்கு வருகிறது. நாற்று ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், ஒரே சமயத்தில் 5 ஆயிரம் நாற்றுகள் வரை விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர். இதனால் நாற்று உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். …

Related posts

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி

தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்

விஷச் சாராய வழக்கு: 9 பேரிடம் விசாரணை