ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி

ராஜபாளையம், ஜூலை 24: ராஜபாளையத்தில் ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை சார்பில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம் என்ற 5 நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில் மாநில அளவில் 20 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த தொழில்துறை நிபுணர்கள் மற்றும் முன்னணி கல்வியாளர்கள் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் பேராசிரியர்களுக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்தனர்.

இந்தப் பயிற்சித் திட்டத்தில், பங்கேற்பாளர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு கருவிகள், ஆட்டோமேஷன் அமைப்புகள், கணினி பார்வை, ரோபாட்டிக்ஸ், ட்ரோன்கள் மற்றும் ரோபோடிக் செயல்முறை ஆட்டோமேஷன் பற்றிய அறிமுகம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ராம்கோ கல்லூரி முதல்வர் கணேசன், துணைமுதல்வர் ராஜகருணாகரன், பொது மேலாளர் செல்வராஜ் மற்றும் பிற துறை தலைவர்கள் கலந்துகொண்டனர். இயந்திரவியல் துறை உதவி பேராசிரியர் வாலை கணேஷ் பயிற்சி வகுப்பினை ஒருங்கினைதார்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து