ராமேஸ்வரத்தில் அரசு பள்ளி மாணவர்களின் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

ராமேஸ்வரம், ஜன. 13: ராமேஸ்வரத்தில் அரசு பள்ளி மாணவர்களின் போதை பொருள் ஒழிப்பு பேரணி நடைபெற்றது. ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய இளைஞர் தினைத்தை முன்னிட்டு நேற்று தேசிய மாணவர் படையினரின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயா கிறிஸ்டல் ஜாய் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் ஜெயக்காந்தன் முன்னிலை வகித்தார்.

பேரணியை மகளிர் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி துவங்கி வைத்தார். மாணவர்கள் பேணருடன் கோயில் நான்கு ரதவீதியில் போதைப்பொருளை ஒழிப்போம் என்கிற விழிப்புணர்வு கோஷத்துடன் பேரணியாக சுற்றி வந்தனர். இறுதியாக தேசிய மாணவர் படை அலுவலர் பழனிச்சாமி நன்றி தெரிவித்து நிறைவு செய்தார். இதில் ஜேஆர்சி கவுன்சிலர் தினகரன் மற்றும் என்எஸ்எஸ், எக்கோ கிளப் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்