ராமேஸ்வரத்தில் அமாவாசையையொட்டி அக்னிதீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்: 50 அடி தூரத்திற்கு கடல்நீர் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்

ராமநாதபுரம்: அமாவாசை மற்றும் விடுமுறை நாளையொட்டி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் திதி கொடுப்பதற்காக ஏராளமானோர் குவிந்த நிலையில், கடல்நீர் பல அடி தூரத்திற்கு உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்தனர். வைகாசி மாதம் அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதபுரம் சுவாமி கோயில் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரையில் திரண்ட மக்கள் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தொடர்ந்து கோயிலின் உள்ளே உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே கடற்கரை பகுதியில் வழக்கத்திற்கு மாறாக 50 அடி தூரத்திற்கு கடல்நீர் உள்வாங்கியதால் அச்சமடைந்த பக்தர்கள் கடலில் இறங்கி குளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஒரு சிலர் பாறையை ஏறி குளிக்க முயற்சித்து கீழே விழும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக ஒருசில பகுதிகளில் கடல்நீர் உள்வாங்குவதும், கடல் சீற்றமாக காணப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.    …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்