ராமர் பாலம் விவகாரம் ஒன்றிய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: சட்டீஸ்கர் முதல்வர் வலியுறுத்தல்

ராய்பூர்: ராமர் பாலம் விவகாரத்தில் நாட்டை தவறாக வழிநடத்தியதற்காக ஒன்றிய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்து உள்ளார். ஒன்றிய விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்ச்சர் ஜிஜேந்திர சிங் கடந்த சில நாட்களுக்கு முன் மாநிலங்களவையில் அளித்த பதிலில், ராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததாக உறுதியாக கூறமுடியது. இந்திய விண்வெளித்துறை செயற்கைகோள் மூலம் ஆய்வு செய்ததில் ராமர் பாலம் இருந்தது என்று  துல்லியமாக கூறமுடியவில்லை’ என்று தெரிவித்தார். இதுகுறித்து சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறுகையில், ‘ஒன்றிய ஆட்சி காங்கிரஸ் வசம் இருந்தபோது, ராமர் பாலம் பற்றி இதையே கூறியபோது, ​​நாங்கள் ராமருக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டோம். ராமர் பக்தர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் அரசாங்கம், ராமர் பாலத்துக்கு உறுதியான ஆதாரம் இல்லை என்று கூறி உள்ளது. எனவே இப்போது அவர்களை எந்த பிரிவில் சேர்க்க வேண்டும்? மக்களை தவறாக வழிநடத்தியதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆர்எஸ்எஸ்சும் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. அவர்கள் உண்மையான ராமர் பக்தர்களாக இருந்திருந்தால், அவர்கள் அரசாங்கத்தை விமர்சித்திருப்பார்கள்’ என்று தெரிவித்தார்….

Related posts

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் எதிரொலி; சுரங்கத்துறை முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் தீ வைத்து எரிப்பு: கார் டிரைவர்கள் சிக்கினர்

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்