ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 இடங்களில் கைத்தறி பூங்கா

 

ராமநாதபுரம், மார்ச் 15: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு நிதி உதவியுடன் 10 இடங்களில் கைத்தறி பூங்காக்கள் அமைய உள்ளதாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவு தொழிலை பாதுகாத்து கைத்தறி துணி ரகங்கள் உற்பத்தியை பெருக்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் வரையறையின்படி, 100 கைத்தறிகள் அமைத்து, அதற்கு தேவையான தொழிற்கூடம், கிட்டங்கி வசதி உள்ளிட்ட அனைத்து கட்டுமான வசதிகளை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக பொது வசதி மையங்கள் உருவாக்கப்பட்டு, தொழில் முனைவோர் தேவைக்காக தயார்படுத்தப்பட்டு வருகிறது.

விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள், நெசவாளர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்பு நோக்கு முகமை அமைத்து, நல்லதொரு வியாபார சந்தை, தொழில்நுட்பம் மற்றும் கைத்தறி துணி ரகங்கள் உற்பத்தி செய்ய தேவையான நடைமுறை மூலதனம் ஆகியவற்றை கொண்டு வந்து, அரசு பொது வசதி மையத்தில் உற்பத்தியை மேற்கொண்டு பயனடையலாம்.

கைத்தறி துணி உற்பத்தியில் ஈடுபட்டு வருவோர், அரசு சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் மூலம் உற்பத்தி மேற்கொண்டு, நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது மட்டுமின்றி, தங்கள் தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து, ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்த விருப்பமுடையோர்www.loomworld.in என்ற இணையதள முகவரியில் உரிய படிவத்தில் 30.3.2024-க்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு தெரிவித்துள்ளார்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து