ராமநாதபுரம் பகுதியில் பலத்த மழை

 

ராமநாதபுரம், அக்.25: ராமநாதபுரம் நகர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பரவலாக கடந்த வாரம் முதல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.சில இடங்களில் மேகமூட்டமாகவும் காணப்பட்டும், பனி பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் நகர் பகுதியிலான அரண்மனை, புதிய பேருந்து நிலையம், கேணிக்கரை, பேராவூர், பாரதி நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பட்டிணம்காத்தான் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.

இதனால் வெயில் சுட்டெரித்த நிலையில் திடீர் மழையினால் ராமநாதபுரம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையினால் ஆங்காங்கே சாலையின் பள்ளங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை